சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த இளைஞரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரது சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
அயோத்தியாபட்டணம் சோதனைசாவடியில், அம்மாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மனோகரனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்த மனோகரனிடம், அபராதத்தை செலுத்திவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும்படி கூறியதால் அவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.