அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி, அதன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வித்தியாசமான அசைன்மெண்ட்டை பெற்றோர்களும், இணைய பயனர்களும் விமர்சித்து வருகின்றனர். பறவையின் இறகுகள், சுவையூட்டும் சிரப்புகள் மற்றும் மசாஜ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி, தங்களின் “பாலியல் கற்பனை” குறித்து ஹாம்-வொர்க் எழுதி வர வேண்டும் என அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் யூஜின் நகரில் உள்ள சர்ச்சில் உயர்நிலைப் பள்ளியின் சுகாதார வகுப்பு (Health Class) மாணவர்கள், அரசு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் அறிவுறுத்தலின்படி, பாலியல் பொம்மைகளை உள்ளடக்கி தங்களின் “பாலியல் சார்ந்த கற்பனையை” விவரிக்கும் ஒரு சிறுகதையை எழுதிவரும்படி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்… உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம்!
அதாவது, அந்த அசைன்மெண்ட்டில்,”நீங்கள் ஒரு பத்தி அல்லது இரண்டு பத்தியில் ஒரு சிறுகதையை எழுத வேம்டும். இந்தக் கதை, எந்தவொரு பாலியல் நோய்களையும் ஏற்படுத்தும் உடலுறவு மற்றும் வாய்வழி உடலுறவு அல்லாத ஒரு பாலியல் கற்பனை சார்ந்ததாகும்
“உணர்வுப்பூர்வமான இசை, மெழுகுவர்த்திகள், மசாஜ் எண்ணெய், இறகுகள், சுவையூட்டப்பட்ட சிரப் போன்றவற்றில் ஏதாவது மூன்றை தேர்வு செய்து உங்கள் கதையில் பயன்படுத்தலாம். உடலுறவு கொள்ளாமலேயே நீங்கள் அன்பான உடல் பாசத்தைக் காட்டலாம் மற்றும் பெறலாம் என்பதை உங்கள் கதை காட்ட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகக் குழுவில் இந்த அசைன்மெண்ட் குறித்து பதிவிட்ட ஒரு மணி நேரத்தில், பெற்றோர்கள் நூற்றுக்கணக்கான கருத்துக்களை பதிவிட்டனர். பள்ளி மீது ஆத்திரமடைந்த பல பெற்றோர்களில் ஒருவரான கேத்தரின் ரோஜர்ஸ், ஆசிரியர் கிர்க் மில்லர் வழங்கிய “பாலியல் கற்பனை” பாடத்தை கண்டித்து, வகுப்பில் உள்ள மாணவர்கள் “மோசமான, அருவறுக்கத்தக்க வகையில் உணர்ந்ததாக கூறினார். இதை எப்படி மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | 30+ அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா! வெளியாகும் பகீர் தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ