அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று, தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த பொது ச் செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று ஓ பன்னீர்செல்வம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியதை சுட்டிக்காட்டி உள்ள (இந்த தீர்ப்பு பொதுக்குழு செல்லுமா செல்லதா என்பதற்கு மட்டுமே. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உரிமையியல் நீதிமன்றத்தின் நாடி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்) ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பு : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது.