வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தன் மீதான ரூ. 200 கோடி மோசடி வழக்கினை வேறு நீதிபதியிடம் ஒப்படைக்ககோரிய மோசடி மன்னன் சுகேஷின் மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது.
பல்வேறு மோசடிகள் செய்ததாக சுகேஷ் சந்திரசேகரன் மீது புகார் எழுந்தது. இதில் மருந்து நிறுவன அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன், காதலி லீனா மரியா பால் என்பவருடன் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது மேலும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் நிலுவையில் உள்ளன. சிறையில் உள்ளார்
ரூ. 200 கோடி மோசடி வழக்கு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கினை வேறு நீதிபதியிடம் ஒப்படைத்து அவர் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சுகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.இதற்கிடையே இந்த வழக்கில் இன்று ஆஜரான சுகேஷின் காவல் மார்ச் 31 வரை நீட்டித்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement