‘ஈபிஎஸ் நல்ல ஆண் மகனாக இருந்தால்..!’ – ஓபிஎஸ் டீம் கொதிப்பு.!

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஆண்மகனாக இருந்தால் பொது இடத்தில் வெற்றி பெற்று பார் என ஓபிஎஸ் டீம் கொந்தளித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், வருகிற திங்கள் கிழமை (20ம் தேதி) வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.

செவ்வாய்கிழமை (21ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு திரும்பப் பெறலாம். அதைத் தொடர்ந்து வருகிற 26ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வருகிற 27ம் தேதி திங்கள் கிழமை 9 மணி முதல் எண்ணிப்படும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது,

இந்தநிலையில் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆண்மகனா என கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூரில் வடக்கு – தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய வைத்திலிங்கம், ‘‘சசிகலா சிறையில் இருந்து வரக்கூடாது என நினைத்தவர் இபிஎஸ். பொதுக்குழு தேர்தலில் ஆண் மகனாக இருந்தால் பொது இடத்தில் பெட்டி வைத்து வாக்கு பெற்று வெற்றி பெற்று பார். எட்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்தவர்.

முதலமைச்சராவதற்கும் – இந்த கழகத்தின் தலைவர் ஆவதற்கும் எடப்பாடிக்கு தகுதி இல்லை. எடப்பாடி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும். எந்த ஜாதிக்கும் சொந்தம் இல்லை அதிமுக’’ என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘‘அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறியிருக்கிறார்.

அவர் ஒரு மாநில தலைவர் தான். முடிவெடுக்க வேண்டியது பாரதிய ஜனதாவின் இந்திய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தான். பொதுச் செயலாளர் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவின் படி எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். ஏனென்றால் சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இன்னமும் தேர்தல் கமிஷனில் ஒருங்கிணைப்பாளர் என்று தான் இருக்கிறது. அதனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கன்னியாகுமரி வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

சட்ட விதிகள் படி என்னென்ன ஆவணங்கள் செலுத்த வேண்டுமோ, அனைத்தையும் நாங்கள் செலுத்துவோம். டிடிவியாக இருந்தாலும் – சசிகலாவாக இருந்தாலும் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும், இது கூடிய விரைவில் நடக்கும்.

நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வரவே முடியாது. திமுக கட்சியினர் காவல் நிலையத்தில் சென்று அவர்கள் கட்சியினரையே தாக்கியது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது காண்பிக்கிறது. பிக்பாக்கெட் திருடன் செய்வதை போல எடப்பாடி பழனிச்சாமி தற்போது இந்த வேலையை செய்து கொண்டுள்ளார்’’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.