திருச்சி : ஆம்னி கார் மீது லாரி மோதி கோர விபத்து.. 6 பேர் பலி.!

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே லாரி மீது ஆம்னி கார் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது.

 இந்த கோர விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சேலம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.