நாட்டை மோசமான நிலையில் காட்டுவது, அவநம்பிக்கையாக பேசுவது போன்ற தாக்குதல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இந்தியாடுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயகம், அதன் அமைப்புகளின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியாததால் நாட்டை மோசமாக காட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இதுவரை இருந்த அனைத்து அரசுகளும் தங்கள் திறமைக்கு ஏற்ப செயல்பட்டு முடிவுகளைப் பெற்றதாகவும், தமது தலைமையிலான அரசு புதிய முடிவுகளை எடுக்க விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.