திருச்சி மாவட்டம் திருவாசி அருகே லாரியும், ஆம்னி வேனும் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே போல் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணம் நோக்கி ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
திருவாசி அருகே இந்த இரு வாகனங்களும் இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆம்னி வேனில் பயணம் செய்த குழந்தை உள்பட 6பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது