இரண்டு புருவங்களுக்கு மத்தியில்: இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைக் காணலாம். இதனைத் தவிர்க்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேல் நெற்றி: உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, செரிமானத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கீழ் நெற்றி: புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம். மனஅழுத்தம், மனச்சோர்வு, அத்துடன் சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் பருக்கள் ஏற்படும். இந்தப் பருக்கள் வந்தவர்கள், மூளையையும் மனதையும் ரிலாக்ஸ்டாக வைத்திருக்கவும்.
காதுகள்: கஃபைன் மற்றும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால், காதுகளில் பருக்கள் தோன்றும். தவிர உடலில் நீர்த்தன்மை குறையும்போதும் தோன்றும். அதிக அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.
மூக்கு: இதயம் அல்லது ரத்த அழுத்தத்தில் பிரச்னை வரும்போது மூக்கில் பருக்கள் வரும். இதைப் போக்க, மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தியானம் அல்லது பிடித்த விஷயங்களில் நேரத்தைச் செலவிடுங்கள்.
கன்னங்கள்: கன்னங்களுக்கும் குடல்களுக்கும் தொடர்பு உண்டு. அதிகமாக புகைப்பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும் கன்னத்தில் பருக்கள் வரலாம். உங்கள் தலையணை உறைகளில் உள்ள கிருமிகளாலும் கன்னங்களில் பருக்கள் பரவும்.
தாடை: ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் தாடைப் பகுதியில் பருக்கள் வரும். இந்தப் பருக்கள் உள்ளவர்கள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பீன்ஸ், கீரை போன்ற உணவுகளைச் சாப்பிடவும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளவும்.
கன்னங்களின் ஓரம்: இந்தப் பகுதி இனப்பெருக்க உறுப்புகளோடு தொடர்புடையது. உடலில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும்போது கன்னங்களின் ஓரத்தில் சிறியதாக பருக்கள் தோன்றும். பெண்களின் மாதவிடாய் காலங்களின்போது மட்டும் இந்த இடத்தில் பருக்கள் அதிகமாக வருவதைக் காணலாம்.