டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுமுறை நாட்களில் கூட வழக்குகளைப் பற்றி சிந்திக்கவும், சட்டங்களைப் படிக்கவும் செலவிடுகிறோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 40-60 வழக்குகளை கையாளுகிறோம் எனவும் இது எங்கள் வேலையில் ஒரு பகுதியே எனவும் பணி நேரத்திற்கு இணையான நேரத்தை அடுத்த நாள் விசாரணைக்கு வரவிருக்கும் வழக்குகளை பற்றி படிக்க செலவிடுகிறோம் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.