நடப்பு ஆண்டிலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியே ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் அட்வகோட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இது தொடர்பான எதிர்வுகூறல் ஒன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த வருடத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 7 வீதம் மற்றும் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகிறது.
வறுமையில் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள்
அந்தவகையில், இந்த வருடமும் பொருளாதார வளர்ச்சி மேலும் 3 எதிர்மறை புள்ளிகளால் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர் கணித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் காரணமாக பொதுமக்கள் தங்களை அறியாமலேயே வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.