பாலகாட்: மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த பெண் விமானி உட்பட 2 பேர் பலியானார்கள். மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டம், பிர்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ஒரு பெண் விமானி உட்பட 2 விமானிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் நொறுங்கி விழுந்தது. இதுகுறித்து பாலகாட் எஸ்பி சமீர் சவுரப் கூறுகையில், ‘‘பாலகாட்டில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் ஒரு ஆணின் உடல் சிதறி கிடந்தது. அவர் விமானத்தில் சென்ற பயிற்சியாளர் என்பது தெரியவந்தது. மேலும் பயிற்சி பெண் விமானியும் விபத்தில் பலியானார்’ என்றார்.