Dhanush, Meena fans fume:தனுஷ், மீனா பற்றி பேசிய நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை சமூக வலைதளவாசிகள் இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தனுஷ்காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷும், கணவர் வித்யாசாகரை இழந்த நடிகை மீனாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இருவருக்கும் வயசு இருக்கு, பாடி டிமான்ட் இருக்கும். அதனால் திருமணம் செய்து கொள்வதில் தப்பில்ல என யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் பயில்வான் ரங்கநாதன்.
Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்
விளாசல்பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவார். அதை பலர் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலரோ, பயில்வான் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பார்கள். ஆனால் தனுஷ், மீனா விஷயத்தில் அனைவரும் ஒன்றுகூடி பயில்வான் ரங்கநாதனை விளாசி வருகிறார்கள். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. எல்லை தாண்டிவிட்டீர்கள் என பயில்வான் ரங்கநாதனை திட்டுகிறார்கள்.
நெட்டிசன்ஸ்தனுஷ், மீனா ரசிகர்கள் மட்டும் அல்லாது பல தரப்பு ரசிகர்களும் பயில்வானை விளாசுகிறார்கள். முன்னதாக ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பாடி டிமான்ட் அதிகம் என்றீர்கள். தற்போது தனுஷ், மீனாவின் பாடி டிமான்ட் பற்றி பேசியிருக்கிறார். பாடி டிமான்டை விட்டால் உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா, அதை பற்றி பேசும் வயதா உங்களுக்கு. இனியாவது அடக்குங்கள் என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மீனாஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் அவர்பாட்டுக்கு படங்களில் நடித்து வருகிறார். மீனா இப்போது தான் சிரித்துப் பேசி சகஜமாக இருக்கிறார். இந்நிலையில் மீனாவை பற்றி இப்படி பேசினால் அவர் நொந்து போய்விடுவார். மீண்டும் வீட்டோடு முடங்கிவிடுவார். நடிகைகளை பற்றி தவறாக பேசும் பயில்வான் ரங்கநாதனை கேட்பாரே இல்லையா என்கிறார்கள் ரசிகர்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்அந்த பேட்டியில் தனுஷ், மீனா பற்றி மட்டும் அல்ல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியும் பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். தன் உறவினரான அனிருத்தின் ஆபீஸுக்கு அடிக்கடி செல்கிறார் ஐஸ்வர்யா. இது குறித்து அறிந்த ரஜினிகாந்த் கோபப்பட்டு மகளை கண்டித்தார். பிரபுதேவாவுடனும் நெருக்கம் காட்டுகிறார் ஐஸ்வர்யா. மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக ஐஸ்வர்யா ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
தம்பிஐஸ்வர்யாவுக்கும், அனிருத்துக்கும் இடையே நெருக்கம் என்று பயில்வான் கூறுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இது குறித்து ரஜினிகாந்த் ஏதாவது செய்ய வேண்டும். இல்லை என்றால் பயில்வான் தொடர்ந்து பேசத் தான் செய்வார். ஐஸ்வர்யாவும், அனிருத்தும் அக்கா, தம்பி. ஆனால் பயில்வான் வேறு மாதிரி பேசு வருகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.