திருவாரூர்: திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் சார்பில் பாரம்பரிய தேசிய நெல் மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது: பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை, கண்ணை இமைக் காப்பதுபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் காத்து வருகிறார். எனவே, இங்கு புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு ஓஎன்ஜிசி அனுமதி கேட்டாலும் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.