Ajith, vijay fans blast Umair Sandhu:அஜித் குமார் தன் மனைவி ஷாலினிக்கு துரோகம் செய்வதாக ட்வீட் செய்த உமைர் சந்துவை விஜய் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.
அஜித்ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித் குமார். அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாவிட்டால் குடும்பத்தாருடன் தான் இருப்பார் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ட்வீட் செய்தார்.
விஜய் ரசிகர்கள்உமைர் சந்துவின் ட்வீட்டை பார்த்து முதலில் கொந்தளித்தது விஜய் ரசிகர்கள் தான். என்ன தான் சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொண்டாலும் பிரச்சனை என்றால் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இந்நிலையில் தான் அஜித்துக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தளபதியன்ஸ்விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அஜித்துக்கு கள்ளத்தொடர்பு என்றால் சின்னக் குழந்தை கூட நம்பாது. அவராவது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாவது. அஜித்தை பற்றி இன்னும் ஒரு வார்த்தை தவறாக சொன்னால் அவ்வளவு தான். யாரை பார்த்து என்ன பேசுகிறீர்கள். இந்தியா பக்கம் வாங்க, உங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டியிருக்கிறது உமைர் சந்து என தெரிவித்துள்ளனர்.
விஜய், கீர்த்திமுன்னதாக விஜய் பற்றியும் ட்வீட் செய்தார் உமைர் சந்து. விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்குமான தொடர்பு தொடர்ந்து வருகிறது. கீர்த்தி சுரேஷுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளார் விஜய். இது எல்லாம் சங்கீதாவுக்கு பிரச்சனை இல்லை என்றார். அதை பார்த்தே விஜய் ரசிகர்கள் செம டென்ஷன் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் அஜித்தை பற்றியும் பேசியதும் கொந்தளித்துவிட்டனர்.
Vijay: கீர்த்திக்கு காஸ்ட்லி கார் கொடுத்தார் விஜய், மனைவிக்கும் தெரியும்: ட்வீட்டிய விமர்சகரை தேடும் தளபதி ரசிகர்கள்
சூர்யாஅஜித், விஜய் மட்டும் அல்ல சூர்யாவை பற்றியும் தரக்குறைவாக ட்வீட் செய்துள்ளார் உமைர் சந்து. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் ஹீரோயின் பாலிவுட் நடிகை திஷா பதானி. இந்நிலையில் திஷா ஹாட்டாக இருப்பதாக நினைக்கிறார் சூர்யா. அதனால் சாப்பிட, டீ குடிக்க தன் கேரவனுக்கு திஷாவை அழைக்கிறார் என்றார் உமைர். அதை பார்த்தவர்களோ, இதை சூர்யாவின் ஹேட்டர்ஸ் கூட நம்ப மாட்டார்கள் என்றார்கள். Suriya: சூர்யாவாவது, கவர்ச்சி நடிகையை தனியாக அழைப்பதாவது: இதை அவர் ஹேட்டர்ஸே நம்ப மாட்டாங்களே
தனுஷ்Dhanush: ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்த தனுஷ்?: யோவ் டுபாக்கூர், கையில கெடச்ச, அவ்ளோ தானு விளாசும் ரசிகாஸ்தனுஷ் பற்றியும் ட்வீட்டினார் உமைர் சந்து. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்தார் தனுஷ். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர் என்றார். அதை பார்த்து தனுஷ் ரசிகர்கள் உமைரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.