எந்த காலத்திலும் பாமக அங்கம் வகிக்கும் கட்சியில் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் விசிக
பேசிய பேச்சு மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
சோசியல் மீடியா மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஆங்காங்கே தலித் சமுதாயத்தினரின்மீதான சாதிய அக்கிரமங்கள் தலை விரித்து ஆடியது. சமூக நீதிக்காக எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாட்டில் கால் பதித்தும் இன்றைய சில பகுதிகளில் நடப்பதை போல சாதிய அடக்குமுறைகளை ஒடுக்க முடியவில்லை. தலித் சமுதாயத்துக்கு ஆதரவாக பல தலைவர்கள் இருந்தாலும் பொது வெளியில் நின்று ஆதிக்க சாதியினரின் கொடுங்கோன்மையை எதிர்த்து குரல் கொடுக்க ஒரு தலைவர் தேவைப்பட்டது.
திருமாவளவன் அந்த இடத்துக்கு பொருத்தமானவராக தலித் மக்களுக்கு தெரிந்தார். இருப்பினும் அவரது சமூக நீதி பார்வை தலித் மக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுநிம்மதியின் நோக்கமாக இருந்தது. அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும் அவரது சமூகத்துக்காக அமைப்பை உருவாக்கி அது நாளடைவில் பெரிய அரசியல் கட்சியாக மாறியது.
இந்தநிலையில், 2009 ஆண்டில் இலங்கை தமிழர்களுக்காக திருமாவளவன் உண்ணா விரத போராட்டத்தை நடத்தினார். நான்கு நாட்களாக நடந்த அந்த போராட்டத்தில் திருமாவளவனின் உடல்நிலை மோசமானது. கலக்கம் அடைந்த நிர்வாக குழு போராட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து. ஆனால், திருமாவளவன் இசைவு கொடுக்கவில்லை. உடனே அங்கு வந்த பாமக நிறுவனர்
போராட்டத்தை கைவிடும்படி திருமாவளவனுக்கு அறிவுறுத்தினார். அப்போது சில கோரிக்கையையும் ராமதாஸ் வைத்தார்.
அப்போது ராமதாஸ் , ” இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். எனவே உணாவிரத போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்” என்று ராமதாஸ் கோரிக்கை வைக்க திருமாவளவனும் அதை ஏற்று போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில், அதுதான் நான் செய்த வரலாற்று பிழை என்று தற்போது திருமாவளவன் கூறியது பேருபொருளாகியுள்ளது.
திருமாவளவன் கூறியது; பாமக உடன் என்னைக்குமே விசிக கூட்டணி அமைக்காது… உண்ணாவிரத போராட்டத்துக்கு பிறகு என்னை கொலை செய்ய முயற்ச்சித்தார்கள்.. தமிழகத்தில் நடக்கும் எல்லா காதல் திருமணங்களுக்கும் நான்தான் காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். உடனே தலித்துக்கு எதிராக அனைத்து சமுதாய பேரியக்கத்தை உருவாக்கினார்கள். 32 மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு திருமாவளவனை ஏன் இன்னும் கொல்லாமல் உயிரோடு வைத்திருக்கிறீர்கள் என்று ஆலோசனை நடத்தினார்கள்.. அதன் அடிப்படையில் 8 இடங்களில் என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது.. தமிழ்நாட்டில் பெரியார் பிராமணர்களுக்கு அல்லாதோர் என்ற சமூக நீதிக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.. ஆனால், ராமதாஸ் தலித் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்கி மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்தார்.. அப்படி ஒரு இயக்கத்தை உருவாக்கி என்னை தீர்த்துக்கட்ட எனக்கு எதிராக வன்மத்தை பரப்பியவர்தான் ராமதாஸ்.. ஒருநாளும் விசிக பமாகவுடன் கூட்டணி அமைக்காது என்பதற்கு இதுதான் காரணம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.