மது பாட்டிலால் பெட்ரோல் பங்க் மேனேஜரை தாக்கிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு மதன் என்பவர் வந்து தன்னுடைய ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து கொண்டு தனக்கு பணம் தரும்படி கேட்டு இருக்கிறார். இதற்கு பெட்ரோல் பங்க் மேனேஜர் நவீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மதனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை பெட்ரோல் பங்குக்கு வரச் சொல்லி இருக்கிறார். பின் தொடர்ந்து நவீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து மேனேஜர் நவீனின் வயிற்றில் குத்தி இருக்கிறார்.
நவீனை குத்திவிட்டு மதன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரை கைது செய்துள்ளார். மேலும், தலைமறைவாக இருக்கும் அஜித் என்ற ஒரு நபரை தேடி வருகின்றனர்.