Rajamouli: ஆஸ்கர் விழாவை காண ஆர்.ஆர்.ஆர். டீமுக்கு இலவச பாஸ் இல்ல: தலைக்கு ரூ. 20 லட்சம் கொடுத்த ராஜமவுலி?

No free Oscar passes for RRR team:தன் பட பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பார்க்க பெரும் தொகையை செலவு செய்து டிக்கெட் வாங்கியிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமவுலி.

​நாட்டு நாட்டு​எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும். இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டார்கள்.
​ஆஸ்கர்​அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் டால்பி தியேட்டரில் மார்ச் 12ம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. அந்த விருது விழாவிnd தன் மனைவி ரமா, மகன், ராம் சரண், அவரின் மனைவி உபாசனா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார் ராஜமவுலி. ஆர்.ஆர். ஆர். படக்குழுவுக்கு கடைசி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததை பார்த்து இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

​டிக்கெட்​ஆஸ்கர் விருது விழாவில் ராஜமவுலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு கலந்து கொள்ள பெரும் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெறுபவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மட்டும் தான் இலவச பாஸ் கொடுப்பார்கள். அதனால் தனக்கும், படக்குழுவுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார் ராஜமவுலி என்று கூறப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 20.6 லட்சம் ஆகும்.

​SS Rajamouli, Oscars 2023: ஆஸ்கர் விருதுக்காக ரூ. 80 கோடி செலவு செய்தாரா ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் எஸ். ராஜமவுலி?

​ரசிகர்கள்​ஆஸ்கர் விருது வென்ற படத்தின் இயக்குநருக்கு கூட இலவச டிக்கெட் கொடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருது வென்ற படக்குழுவை சேர்ந்தவர்களை ஏன் கடைசி வரிசையில் அமர வைத்தார்கள். படக்குழுவை அவமதித்துவிட்டார்கள் என்று மேலும் தெரிவித்துள்ளனர். விருது பெற்ற கீரவாணியும், சந்திரபோஸும் மட்டும் பிற ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
​குடும்பத்தார்​ஆஸ்கர் விருது விழாவில் ஜூனியர் என்.டி.ஆர். மட்டும் குடும்பத்தார் இல்லாமல் கலந்து கொண்டார். ராஜமவுலி தன் மனைவி, மகன் கார்த்திகேயா மற்றும் குடும்பத்தாருடன் பங்கேற்றார். ராம் சரண் தன் கர்ப்பிணி மனைவியுடன் கலந்து கொண்டார். ஆர்.ஆர். ஆர். படக்குழுவும், அவர்களின் குடும்பத்தாரும் இந்திய பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து இந்திய ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார்கள்.

​Oscars 2023, RRR: விசில் போடு: ஆஸ்கர் விழாவில் வேஷ்டி, சேலையில் அசத்திய ஆர்.ஆர்.ஆர். படக்குழு

​டான்ஸ்​ஆஸ்கர் விழாவில் வெளிநாட்டு கலைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள். ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் ஆடுவதாக இருந்தது. ஆனால் இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருந்ததால் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ண நேரமில்லையாம். இதையடுத்தே ஆஸ்கர் விழாவில் ஆட மறுத்துவிட்டார்களாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.