டெல்லி: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி இருந்த ‘ஆர்ஆர்ஆர்’ என்ற பான் இந்தியா படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா நடித்திருந்தனர். இப்படம் பெரிய வெற்றிபெற்று, உலகம் முழுவதும் ₹1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் அதிவேகமாக நடனமாடி இருந்த ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது
வென்றது.
எம்.எம்.கீரவாணியின் இசையில் உருவாகி இருந்த இப்பாடல், ஏற்கனவே கோல்டன் குளோப் விருது வென்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலில் நடனமாடிய ராம் சரணை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராம் சரணைப் பாராட்டி வாழ்த்தினார். இந்த சந்திப்பின்போது ராம் சரணின் தந்தையும், ெதலுங்கு பட சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி உடனிருந்தார்.