மாமல்லபுரம் : மாமல்லபுரம் அருகே வடகடும்பாடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த தந்தை கோதண்டன் (40), மகன் ஹேமநாதன் (10) உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை பார்த்து வானத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்தில் இருந்து தந்தையும் மகனும் வழுக்கி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்