திருச்சி: இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி வழங்கப்பட்டு, மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நேரடியாக வந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் வரை, வருகைப்பதிவேட்டில் இருந்து பெயரை நீக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியிருந்தது