தென்கொரியாவில் நடைபெற்றுவரும் சுதந்திர கேடயம் 23 கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க வீரர்கள் வான்வழி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தலைநகர் சியோலுக்கு வடக்கே போச்சியோனில், வடகொரியா எல்லையில் இருந்து 30 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இப்பயிற்சி நடைபெற்றது.
இதில் ராணுவ ஹெலிகாப்டர்கள் M777 ஹோவிட்ஸரை கொண்டு சென்றன. மேலும் இன்று அமெரிக்கா-தென்கொரியா விமானப்படைகள் B-1B குண்டுவீச்சு விமானங்கள் தலைமையில் ஒருங்கிணைந்த விமானப் பயிற்சியை மேற்கொண்டன.
பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வடகொரியா இன்று கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.