2வது ஒருநாள் போட்டி: ஆஸி., அபார வெற்றி| 2nd ODI: Aussies, big win

விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

வீழ்ச்சி

இந்திய அணி துவக்க வீரர் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுக்கும், சூர்யாகுமார் யாதவ் 0 ரன்னுக்கும் அவுட்டாகினர். கேஎல் ராகுல் 9 ரன், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுக்கும், குல்தீப் யாதவ் 4, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 31, அக்சர் படேல் 29, ரவிந்திர ஜடேஜா 16 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்திய அணியின் ஆட்டம் 26 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்த நிலையில் முடிவுக்கு வந்தது. ஆஸி., அணியின் மிச்சல் ஸ்டார்க் 5, அபோட் 3 , நாதன் எலியஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடி

இதன் பிறகு 118 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மிச்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அவர்களை பிரிக்க இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், ஒன்றும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்ஷ் 66 ரன்களுடனும், ஹெட் 51 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.