தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
கண்காட்சியில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் மற்றும் தேசிய, மாநில தலைவர்களுடனான புகைப்படங்கள், நலத்திட்ட துவக்க நிகழ்ச்சி புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது காவலர் தாக்கியதாக கூறப்படும் நிகழ்வு ஒலி, ஒளி காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.