தன்னுடன் நடித்த சக நடிகையை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ட்விட்டரில் பிளாக் செய்ததாக நடிகை பானு ஸ்ரீ மேஹ்ரா ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்தது சர்ச்சையானது. இந்நிலையில், மீண்டும் அவரை ட்விட்டரில் பின் தொடர அனுமதி அளித்ததற்கு அல்லு அர்ஜுனுக்கு, நடிகை பானுஸ்ரீ நன்றி தெரிவித்துள்ளார்.
‘அல வைகுந்தபுரம்லோ’ படத்திற்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா – 1’ திரைப்படம் அவரை பான் இந்தியா நடிகர் அஸ்தஸ்துக்கு உயர்த்தி பிடித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி பாடலில் அவரின் நடனத்தை, கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் இமிடேட் செய்து ரீஸ்ஸ் வெளியிட்டு வந்தனர். கிரிக்கெட் மைதானங்களிலும், அவரின் அந்த நடனம் வைரலானது.
தற்போது, ‘புஷ்பா 2’ படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஜோடியாக 2010-ம் ஆண்டு ‘வாருடு’ படத்தில் நடித்திருந்த நடிகை பானு ஸ்ரீ மேஹ்ரா, ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்திருந்தார். அதில், நடிகர் அல்லு அர்ஜுன் தன்னை ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டதாகவும், போராட்டங்களின்போது நகைச்சுவையுடன் இருக்க கற்றுக்கொண்டேன் எனவும் வருத்தமாக பதிவிட்டு இருந்தார்.
If you ever feel like you’re stuck in a rut, just remember that I acted in Varudu with Allu Arjun and STILL couldn’t get any work. But I’ve learned to find humor in my struggles – especially now that Allu Arjun has blocked me on Twitter Go subscribe ?https://t.co/mqX2lVNjwx pic.twitter.com/ycSR5yGpfl
— Bhanushree Mehra (@IAmBhanuShree) March 18, 2023
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘வாருடு’ திரைப்படம், திரையரங்கில் வெளியானபோது படுதோல்வியை சந்தித்தது. இதனால், அறிமுக நடிகையான பானு ஸ்ரீ மேஹ்ராவுக்கு அதன்பிறகு பெரியளவில் படங்கள் கிடைக்காதநிலையில், இதனைப் பதிவு செய்திருந்தார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை, நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், மீண்டும் அல்லு அர்ஜுன் தன்னை அன் – பிளாக் செய்துவிட்டதாக பானு ஸ்ரீ மேஹ்ரா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் “எனது தொழில் பின்னடைவுகளுக்கு நான் அவரை ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை. மாறாக, எனது போராட்டங்களில் நகைச்சுவையைக் கண்டறிந்து முன்னேறக் கற்றுக்கொண்டேன். நன்றி அல்லு அர்ஜுன்” என்று தெரிவித்துள்ளார்.
Great news, Allu Arjun has unblocked me! To clarify, I NEVER blamed him for my career setbacks. Instead, I’ve learned to find humor in my struggles and keep moving forward. Stay tuned for more laughs and good vibes! Thanks, Allu Arjun, for being a good sport. @alluarjun pic.twitter.com/oLovQdnWAE
— Bhanushree Mehra (@IAmBhanuShree) March 18, 2023