திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த, கல்லூரி மாணவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின் நீதிமன்றத்தால் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் ராஜ் என்ற 17 வயது கல்லூரி மாணவன், தன்னுடன் பயின்று வரும் கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் ஆகாஷ் ராஜின் காதலை மாணவி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாடக காதலன் ஆகாஷ் ராஜ், மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அதனை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நாடக காதலன் ஆகாஷ்ராஜ்-யை கைது செய்தனர்.
பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, மாணவன் 18 வயது நிரம்பாததாலும், அவன் கல்லூரியில் படித்து வருவதாலும் சிறை தண்டனை ஏதும் வழங்காத நீதிபதி, கடுமையாக எச்சரித்து விடுதலை செய்து அனுப்பி வைத்தார்.
கடந்த வாரம் மட்டும் தமிழகத்தில் ஒருதலை நாடக காதலன்களால் இரு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.