பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தது குறித்து, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர்.
ஒற்றுமை இந்தியா நடைபயணத்தின் முடிவில் ஸ்ரீநகரில் பேசிய ராகுல், பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீசார் ராகுலை சந்தித்து, கூடிய விரைவில் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், முதற்கட்ட அறிக்கையை போலீசாரிடம் ராகுல் வழங்கியதாகவும், 10 நாட்களுக்குள் விரிவான பதில் அளிப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.