மதுரை: தமிழகத்தில் அதிமுக உயிர் வாழ போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்தார்.
மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சி விழா ஒன்றில் பங்கேற்க தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது. “சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கிறது. அதிகாரப் பங்கீடு என்பது இன்னும் குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கவில்லை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுக்கு பிறகும் உயர்கல்வி நிறங்களான ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றகளிலும் இன்னும் அந்தந்த மக்கள் விகிதச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உண்மை. அத்தகைய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க தரவுகள் வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய பாஜக , அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நமது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் குறித்த கேள்விக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு திமுக அரசுக்கு முதல்வர் செயல்பாட்டுக்கும் மக்கள் தந்திருக்கும் அங்கீகாரமாக பார்க்கிறேன். அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி தலைவர்கள் வேகமாகவும், ஆர்வத்தோடும் வேலை செய்தனர். மக்கள் தந்திருக்கும் பெருவாரியான தீர்ப்பு என்பது மக்கள் செல்வாக்கு திமுக அரசுக்கும், அபரிவிதமாக இருக்கிறது என, இடைத்தேர்தல் சொல்கிறது. நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். மேலும், அதிமுக உயிர் வாழ போராடும் சூழலில் தங்களது அடையாளம், அதிகார பங்கீட்டுக்காக தொடர்ந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். இச்சூழலில் இன்றைக்கு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றிப் பயணம் என்பது பாராளுமன்றத் தேர்தலிலும் வெல்லும்” என்றார்.
2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள் இவ்வாறு அவர் கூறினார்.