டாக்கா : வங்கதேசத்தில் சாலையோரப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலியாகினர்; 30 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று குல்னாவில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பஸ், மதாரிப்பூர் மாவட்டத்தின் ஷிப்சார் உபாசிலாவில் உள்ள குதுப்பூர் பகுதியில் வந்த போது சாலையோரம் இருந்த 30 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 1௬ பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பஸ் அதிவேகமாக வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
மேலும், பஸ்சின் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மோசமான சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் தெற்காசிய நாடுகளுள் வங்கதேசமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement