பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இல்லாத முதல் அன்னையர் தினத்தை குறிக்கும் விதமாக மன்னர் சார்லஸ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மன்னர் சார்லஸ் பகிர்ந்த புகைப்படம்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணத்திற்கு பிறகு வரும் முதல் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மனதை தொடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், பிரித்தானிய மன்னர் சார்லஸ் குறுநடை போடும் குழந்தையாக இருந்த போது அவரது தாயின் மடியில் அமர்ந்து இருப்பது இடம்பெற்றுள்ளது.
மற்றொரு புகைப்படம், குயின் கன்சார்ட் கமிலா 1994 இல் இறந்த அவரது மறைந்த தாயார் ரோசாலிண்ட் ஷாண்டுடன் நிற்பதை காட்டுகிறது.
மேலும் அந்த பதிவில், ”எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், இன்று தங்கள் அம்மாவைக் காணாதவர்களுக்கும், நாங்கள் உங்களை நினைத்து, உங்களுக்கு ஒரு சிறப்பு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.” என எழுதப்பட்டு இருந்தது.
ராணி கன்சார்ட்டின் தாயார் இறப்பதற்கு முன் பல ஆண்டுகளாக ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் அவதிப்பட்டார், ஆதலால் இப்போது குயின் கன்சார்ட் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
கென்சிங்டன் அரண்மனை
மன்னர் மற்றும் குயின் கான்சார்ட் ஆகிய இருவரின் அன்னையர் தின வாழ்த்துக்களை தொடர்ந்து, கென்சிங்டன் அரண்மனையும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அதில் வேல்ஸ் இளவரசி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து, “உங்களுக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து அன்னையர் தின வாழ்த்துக்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Happy Mother’s Day from our family to yours ❤️ pic.twitter.com/kpZgj3NwhB
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) March 19, 2023