வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியாங்காங் : அமெரிக்காவுக்கு எதிராக போர் புரிய எட்டு லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது.
சமீபகாலமாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் வட கொரியாவின் ‘ரோடங் சின்முன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுக்கு எதிராக போரிட எட்டு லட்சம் மக்கள் வட கொரிய ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வட கொரியா ‘வாசாங்போ-17’ என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியதுடன் போரை துாண்டும் வகையில் ஈடுபடும் அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கவே இந்த ஏவுகணை பரிசோதனை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏவுகணை சோதனை
வட கொரிய தலைநகர் பியாங்காங்கின் சுனான் என்ற பகுதியிலிருந்து கிழக்கு கடல்பகுதியில் குறுகிய இலக்கை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையைவட கொரியாக நேற்று நடத்தியது.
இதை தென் கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வட கொரிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து கூர்ந்துகண்காணித்து வருவதாக தென் கொரிய அரசுதெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement