சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின கல் என ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.