தமிழக பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிருக்கான ரூ.1,000 மாதாந்திர உரிமைத் தொகை, சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை செலுத்தும் வகையில் மின் கட்டணம், முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம், முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக பட்ஜெட் தாக்கல்
மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இருக்கை விவகாரம் தொடர் சர்ச்சையாகி வருகிறது. முன்னதாக
,
இடையில் அதிகார மோதல் உச்சம் தொட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி அதிரடி காட்டினார்.
அதிமுகவில் மோதல்
இதுதொடர்பாக இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி வருகின்றன. இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ்சிடம் இருந்து பறித்து ஆர்.பி.உதயகுமாருக்கு எடப்பாடி ஒப்படைத்தார். இதனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் இருக்கையை மாற்றி தர வேண்டும் சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி தரப்பு கோரிக்கை விடுத்தது.
இருக்கை விவகாரம்
ஆனால் சபாநாயகர் திட்டவட்டமாக ஏற்கனவே கூறிவிட்டார். எடப்பாடி, ஓபிஎஸ் என இருவரின் இருக்கையிலும் மாற்றமில்லை என்பதை கடந்த கூட்டத்தொடரின் போதே அறிவித்து அதை செயல்படுத்தி காட்டினார். இருப்பினும் அதிமுகவில் மோதல் போக்கு நிறைவடையாத நிலையில் மீண்டும் சட்டமன்ற இருக்கை விவகாரம் சூடுபிடிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பொதுச் செயலாளர் தேர்தல்
அதிமுகவில் அடுத்தகட்டமாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த எடப்பாடி தரப்பு காய்களை நகர்த்தி வந்தது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாடியது. அதில் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் அறிவிப்பை வெளியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கை ஏப்ரல் 11க்கு பதிலாக மார்ச் 22ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்தது.
நீதிமன்ற உத்தரவு
இதன் தொடர்ச்சியாக வரும் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் வரும் 24ஆம் தேதி ஒரு தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் என்னவென்பது தீர்மானிக்கப்படுவது உடன், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இருக்கை யாருக்கு செல்லும் என்பதும் முடிவு செய்யப்பட்டு விடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.