போபால்: உ.பி ரேபரேலியில் இந்திரா காந்தி தேசிய பிளையிங் அகாடமி செயல்படுகிறது. அகாடமியை சேர்ந்த பயிற்சி விமானம் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பிர்ஸி விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை இமாச்சலை சேர்ந்த பயிற்சியாளர் மோகித் தாக்குரும் (25), குஜராத்தை சேர்ந்த பயிற்சி விமானி மகேஸ்வரியும் (20) இயக்கினர்.
அப்போது ம.பி. கிர்னாபூர் பகுதியில் விமானம் வனப்பகுதி யில் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகளும் உயிரிழந் தனர். இருவரது உடல்களையும் மத்திய பிரதேச போலீஸார் மீட்டனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.