கள்ளக்குறிச்சியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதையறிந்த இருவரின் பெற்றோர், இரண்டு பேரையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி தங்கதுரையுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கதுரை, சம்பவத்தன்று பள்ளி முடிந்து பேருந்து வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுமியை தாக்கியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் தங்கதுரை கைது செய்தனர்.