நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவரா?

தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார்.  இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.  அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதனை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டியது.  பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் மொழிப்படங்கள் மட்டுமின்றி இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.  

 

வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் நடிகர் அசோக் செல்வன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.  திரை பிரபலங்கள் குறித்து அடிக்கடி கிசுகிசுக்கள் எழுவது வழக்கமான ஒன்று, அந்த வகையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வன் பற்றிய கிசுகிசுக்களும் ஊடகங்களில் வெளியானது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது அமெரிக்காவில் பாடகியாகவும், மாடலாகவும் கலக்கி வரும் பிரகதி குருப்ரசாத்தை, நடிகர் அசோக் செல்வன் காதலிப்பதாக செய்திகள் வெளியானது.  அதற்கேற்ப இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது.  அதன்பின்னர் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்றும் தங்களுக்குள் இதுபோன்ற உறவு எதுவுமில்லை என்றும் விளக்கம் அளித்தனர். 

அசோக் செல்வன்-பிரகதி விஷயம் தற்போது அடங்கியுள்ள நிலையில், மீண்டும் அசோக் செல்வனின் திருமணம் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.  அதாவது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை நடிகர் அசோக் செல்வன் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், தற்போது இருவரும் குடும்பமும் இவர்களது திருமண தேதி குறித்து ஆலோசித்து வருவதாகவும், விரைவில் திருமண தேதியும், அந்த பெண் யார் என்கிற தகவலும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.