லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் காஸ்டிங் தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கின்றது. த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலி கான், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.இதைத்தவிர மேலும் சில முக்கியமான நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க படத்தில் மெயின் வில்லன் யாராக இருப்பார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் வலம் வர துவங்கியுள்ளன. லோகேஷ் இயக்கிய முந்தைய படமான விக்ரம் திரைப்படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தார்கள். அதில் விஜய் சேதுபதி முதன்மையான வில்லனாக நடிக்க அவருக்கும் மேலாக சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார்.
Aishwarya Rajini: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த கொள்ளை..3 பேர் மீது சந்தேகம் என புகாரளித்த ஐஸ்வர்யா..!
மேலும் விக்ரம் LCU படம் என்பதால் அதில் கைதி படத்தின் கதாபாத்திரங்களும் வந்தன. எனவே லியோ படம் LCU வா இல்லை தனி கதையா என்பது தெரியாத பட்சத்தில் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து இப்படத்திலும் ஏகப்பட்ட வில்லன்கள் இருப்பார்கள் என ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கௌதம் மேனன்,மிஸ்கின் ஆகியோரின் பகுதி முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கண்டிப்பாக மெயின் வில்லனாக இருக்கமாட்டார்கள் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.ஏனென்றால் அவர்கள் இருவரும் சில நாட்களே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதால் அவர் சைடு வில்லனாகவே இருப்பார்கள் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து அர்ஜுன் அல்லது சஞ்சய் தத் ஆகியோரில் ஒருவர் தான் மெயின் வில்லனாக இருப்பார்கள் என தெரிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சஞ்சய் தத் மெயின் வில்லனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றதாம். அவர் காஷ்மீர் படப்பிடிப்பிலும், சென்னையில் நடக்கும் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள இருக்கின்றார். எனவே அவர் தான் மெயின் வில்லன் என கூற அவர் இல்லை சூர்யா தான் மெயின் வில்லனாக இருப்பார் என ரசிகர்கள் புது கணக்கை போட்டு வருகின்றனர்
ஆனால் சூர்யா லியோ படத்தில் நடிக்கமாட்டார் எனவும், அவரின் கதாபாத்திரத்தின் பெயரோ அல்லது அவரின் குரலோ தான் படத்தில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இருப்பினும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான் லியோ படத்தின் பிரதான வில்லன் என இணையத்திலும் ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது.
ஆனால் லோகேஷ் நான் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கண்டிப்பாக லியோ படத்தில் வைத்திருப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.