இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவியாகிய சாராவின் புதிய நண்பர் ஒருவருக்கு பாலியல் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் ராஜ குடும்பத்துக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.

ராஜ குடும்பத்துப்பெண்களின் நட்புகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்துப் பெண்களின் நட்புகள் மிகவும் பிரபலமானவை. மௌண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினா முதல் இளவரசி டயானா வரை, அவர்களுடைய நட்புகள் குறித்து இன்றும் பேசப்படுகின்றன.

அவ்வகையில், இளவரசர் ஆண்ட்ரூவும், அவரது மனைவியான சாரா ஃபெர்குசனும் விவாகரத்து செய்தபிறகு, சாராவுக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்திருக்கிறார். அவர், அமெரிக்கக் கோடீஸ்வரரான Trammell Crow Jr (72) என்பவர். 

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு | Andrew Wife Is Friends With The Worst Person

Credit: Getty

ராஜ குடும்பத்துக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவு

இளவரசர் ஆண்ட்ரூ பருவம் எய்தாத ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் பாலுறவு வைத்துக்கொண்ட விடயம் ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

மகாராணியாரின் மறைவுக்குப் பிறகு, மன்னரான சார்லஸ் ஆண்ட்ரூ மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். 

இந்நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாராவின் புதிய நண்பரான Trammell, பாலியல் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு நிதியுதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு | Andrew Wife Is Friends With The Worst Person

Credit: Getty

Trammell நிதியுதவி செய்த ஒரு கடத்தல் கும்பல், தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, இரண்டு பெண்கள் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

சுதாரித்துக்கொண்ட சாராவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், சாரா ஒரே ஒரு முறைதான் Trammellஐ சந்தித்துள்ளதாகவும், அதுவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவே இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை பெரிதாக வெடிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு | Andrew Wife Is Friends With The Worst Person

Credit: LNP

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு | Andrew Wife Is Friends With The Worst Person

Credit: Alamy

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.