ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இது நயன்தாரா நடிக்கும் 75வது படமாகும். அதனால் அந்த படத்தை தற்போதைக்கு நயன்தாரா 75 என்று அழைக்கிறார்கள். மார்ச் 18ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள்.
படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறாராம். முன்னதாக அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்தார் ஜெய்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆனால் அந்த காதல் நிறைவேறாமல் போய்விடும். நிலேஷ் கிருஷ்ணா படத்திலாவது நயன்தாராவும், ஜெய்யும் சேர்வார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நயன்தாரா 75 படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா 75 படத்தை தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த ஜதின் சேத்தி கூறியதாவது, சூப்பர் ஸ்டார் நடிகையை வைத்து படம் தயாரிப்பது எங்களுக்கு கவுரவம். படப்பிடிப்பு துவங்கியதில் சந்தோஷம் என்றார்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்நிலையில் அவர் நயன்தாரா 75 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு கை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா பாலிவுட் சென்றுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.
Vijay, Jawan: பாலிவுட் போகும் விஜய்: ஜவானில் கெத்து காட்டப் போறார் தளபதி
தம்பி அட்லிக்காக ஜவானில் நடிக்கிறார். கவுரவத் தோற்றம் தான் என்றால் விஜய்யின் கதாபாத்திரம் வெயிட்டானதாம். ஜவானில் விஜய் தவிர்த்து ஷாருக்கானுக்கு ராசியான ஹீரோயினான தீபிகா படுகோனும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா படங்களில் நடிப்பதுடன் தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தான் ஷுப் யாத்ரா எனும் குஜராத்தி படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் அனைத்துமே தரமானதாக இருக்கிறது. அதனால் ஷுப் யாத்ராவை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா தற்போது தனி ஆள் இல்லை. இரண்டு மகன்களுக்கு அம்மா. அதனால் தன் இரட்டை ஆண் குழந்தைகளை தன்னை மிஸ் பண்ணாத அளவுக்கு அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்.
மும்பைக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது மகன்களையும் தூக்கிச் சென்றார். நயன்தாராவுக்கு உதவியாக விக்னேஷ் சிவனும் மும்பைக்கு சென்றார். மகன்களுடன் அவர்கள் மும்பை விமான நிலையத்தில் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Ajith, AK 62: மகிழ்திருமேனியையும் கழட்டிவிடும் அஜித்?: எஸ்கேப் டா மச்சினு விக்னேஷ் சிவன் ஹேப்பி?
அஜித்தின் ஏ.கே. 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் தன் செல்ல மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார். மகன்களுடன் இருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.