நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வீட்டு லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் திருடு போய் விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர்.
தற்போது இவர் திரைப்பட தயாரிப்பு பணியில் பிசியாக உள்ளார்.
நகை மாயம்
இந்நிலையில் இவர் வீட்டில் வைத்திருந்த 60 சவரன் நகை காணமால் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகை, வைரம், நவரத்தின கற்கள் போன்றவை 2019ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்துள்ளது.
நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசில் புகார்
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னேடுத்து வருகின்றார்கள்.
மேலும் லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கு தெரியும் என புகார் மனுவில் இருந்துள்ளதாக என்பது குறிப்பிடத்தக்கதாகும்.