விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்து, அவர் வளர்ந்த பின் ஹீரோவாக்கியவர் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். அவருடன் சேர்ந்து விஜய் படங்களில் வேலை பார்த்தார் அம்மா ஷோபா. விஜய் படங்களில் பாடல்கள் பாடவும் செய்திருக்கிறார் ஷோபா.
அம்மா மீது விஜய்க்கு தனி பாசம் உண்டு. அவர் அம்மா பிள்ளை. தான் அம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்த விஜய் தவறியதே இல்லை. விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. ஆனால் அம்மாவுடன் அவர் வழக்கம் போல் தான் பாசமாக இருந்து வருகிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஷோபாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. அதாவது தன் செல்ல மகனுக்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை இத்தனை ஆண்டுகளாக நிறைவேறவே இல்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார். உடனே ஷோபா அவரை தொடர்பு கொண்டு, விஜிமா லியோ படத்தில் அம்மா கதாபாத்திரம் இருந்தால் நான் உனக்கு அம்மாவாக நடிக்கட்டுமா என்று பாசமாக கேட்டிருக்கிறார்.
அதை கேட்ட விஜய்யோ, போம்மா அங்கிட்டு. அதெல்லாம் நீங்கள் நடிக்கக் கூடாது. நீங்கள் எனக்கு அம்மாவாக நடித்தால் உங்களை செட்டில் பார்த்ததுமே சிரித்துவிடுவேன். என்னால் நடிக்க முடியாது. அதனால் எனக்கு அம்மாவாக நடிக்க விரும்பாதீர்கள் என்று கூறிவிட்டாராம்.
விஜய் சொன்னதை கேட்டு லைட்டா ஏமாற்றம் அடைந்தாலும், மகன் சொல்வதில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு பரவாயில்ல விஜி என தெரிவித்தாராம் ஷோபா.
இது குறித்து அறிந்த ரசிகர்களோ, அம்மா பாவம்ணா. எவ்வளவு ஆசையா கேட்டிருக்கிறார்கள். ஒரேயொரு படம், அட்லீஸ்ட் ஒரேயொரு காட்சியிலாவது உங்களுடன் நடிக்க வைக்க வேண்டும். அம்மாவின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பீர்கள் என நம்புகிறோம் அண்ணா. நல்ல வேளை லியோவில் அம்மா கதாபாத்திரம் இல்லை.
Thalapathy Vijay: விஜய் விக் வச்சு தான் நடிக்கிறார்: காரணம் இல்லாம இல்ல
அம்மா கதாபாத்திரம் இருந்தாலும் அவரையும் போட்டுத்தள்ளிவிடுவார் லோகேஷ் கனகராஜ் என தெரிவித்துள்ளனர்.
லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கடும் குளிரையும் பொருட்படுத்தாது படக்குழு தீயாக வேலை செய்து வருகிறது.
மார்ச் 24ம் தேதியும் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பி வருகிறார்கள். லியோவில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீருக்கு சென்று தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார்.
Leo update: லியோவில் இவரும் வில்லனாமே: இன்னும் எத்தன வில்லன் தான் லோகி?
லியோவில் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் என்று இத்தனை வில்லன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் புதிதாக மதுசூதன் ராவை வேறு வில்லனாக கொண்டு வந்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
படம் முழுக்க விஜய் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாரா?. த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சி எதுவும் இருக்காதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லியோவில் விஜய்யின் மனைவியாக நடித்து வருகிறார் த்ரிஷா. அவரும், விஜய்யும் சேர்ந்து ஒரு பாட்டுக்காவது டான்ஸ் ஆட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் லோகேஷ் கனகராஜின் படத்தில் அது நடக்குமா என்பது சந்தேகமே.