திருவள்ளூர்: தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் எளாவூர் அருகே சாலையோர தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால் விபத்து நேரிட்டது. விபத்தில் உயிரிழந்த இளைஞர்களை அடையாளம் காணும் பணியில் ஆந்திர போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.