பின்லாந்து நாட்டை சேர்ந்த Nokia நிறுவனம் அதன் புதிய X30 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழுக்க மறு ஆக்கம் செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 100% மறு ஆக்கம் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் மற்றும் 65% மறு ஆக்கம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிசைன்இந்த ஸ்மார்ட்போனில் குறைவான அளவு மட்டுமே பிளாஸ்டிக், ரசாயனம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் சுற்று சூழல் மாசு குறைக்கப்பட்டுள்ளது. இதில் மெட்டல் அலுமினியம் பிரேம், தடிமனான டிஸ்பிளே வசதி, IP67 தூசு மற்றும் நீர் பாதுகாப்பு கொண்டுள்ளது.
டிஸ்பிளேஇதில் 6.43 இன்ச் முழு HD+ (1080×2400) AMOLED Corning Gorilla Glass Victus பிளேட் ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளது. இதில் 90HZ Refresh Rate வசதி இருப்பதால் பயன்படுத்த சிறப்பாக இருக்கும்.
கேமரா வசதிகள்முக்கியமான கேமரா வசதிகளாக 50 MP கேமரா + 13 MP அல்ட்ரா வைட் கேமரா கூடுதலாக OIS, Spatial Audio போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் Night Mode 2.0, Dark Vision, Night Selfie, 16MP முன்பக்க செல்பி கேமரா, Gopro Quik App வசதிகளும் உள்ளன.
திறன் வசதிகள்ஸ்மார்ட்போனின் திறன் வசதிக்காக புதிய Qualcomm Snapdragon 695 5G Processor சிப் வசதி, 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வசதி, Android 12, 4200mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 3 ஆண்டுகள் OS அப்டேட், மாதம் ஒருமுறை செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்.
கனெக்டிவிட்டி வசதிகள்இதில் ப்ளூடூத் 51, NFC, inDisplay Fingerprint sensor, eSim வசதி, GPS, USB Type-c (USB 2.0) OTG, டூயல் பேண்ட் 5G வசதி போன்ற முக்கியமான கனெக்டிவிட்டி வசதிகள் பல இடம்பெற்றுள்ளன. மேலும் 5G வசதியும் இருப்பதால் எதிர்காலத்தை பற்றி கவலைப்படத்தேவையில்லை.
விலை விவரம்இந்த ஸ்மார்போன் Cloudy Blue மற்றும் IceWhite ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை 48,999 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் வசதிகளை பார்த்தல் இந்த விலை மிக அதிகமாக தெரியும். ஆனால் இதன் சுற்று சூழல் மாசு இல்லாத பாகங்களுக்காக நாம் இந்த விலையை தரவேண்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்