புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கும், போரின் போது சீனாவுக்கும் சென்று அங்கேயே குடியுரிமைபெற்று செட்டில் ஆனவர்களின் இந்தியாவில் உள்ளசொத்துகள் எதிரி சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சொத்துகள் அனைத்தும் இந்தியாவுக்கான எதிரி சொத்து பாதுகாவலரிடம் (சிஇபிஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை விட்டு இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு சொந்தமாக உள்ளதாக மொத்தம்12,611 எதிரி சொத்துகள் கண்டறி யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி ஆகும்.
எதிரி சொத்து விற்பனைக்கான நடைமுறைகள் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் துணை ஆணையர்களின் உதவியுடன் தற்போது தொடங்கவுள்ளது.
அதன்படி, ரூ.1 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள எதிரி சொத்துகளை பாதுகாவலர் (சிஇபிஐ) முதலில் குடியிருப்பாளரிடம் வாங்க முன்வருவார். அதற்கான வாய்ப்பை குடியிருப்பாளர் மறுக் கும்பட்சத்தில், வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப எதிரி சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம், எதிரி சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.100 கோடிக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சிஇபிஐ அவற்றை மின்னணு ஏல (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யும்.
இதற்கு, பொது நிறுவனங்களின் இ-ஏல தளமான மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷனை சிஇபிஐ பயன்படுத்திக்கொள்ளும் எனஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகள், தங்கம் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3,400 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிஇபிஐ கண்டறிந்துள்ள 12,611எதிரி சொத்துகளில் 12,485சொத்துகள் பாகிஸ்தானியர் களுக்கு சொந்தமா னவை. எஞ்சிய 126 சொத்துகள் மட்டுமே சீனாவில் குடியுரிமை பெற்றவர்களை சார்ந்தவை. தமிழகத்தில் 67 எதிரி சொத்துகளும், கேரளாவில் 71 சொத்துகளும், கர்நாடகாவில் 24 எதிரி சொத்துகளும் உள்ளன.
அதிகபட்சமாக மேற்கு வங் கத்தில் 4,088 எதிரி சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.