நாகை : நாகை அருகே பலம் கட்டுமானப்பணி காரணமாக பொதுமக்கள் இரண்டு கி.மீ தொலைவு சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேதாரண்யம் அருகே கொடிய காட்டில் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை இடித்துவிட்டு புதிய பலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ளது.
கொடியக்காடு – கோடியக்கரை ஊராட்சிகளுக்கு இடையே ஒரே ஒரு பிரதான சாலை மட்டுமே உள்ளதால் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மாற்று பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.