இறைச்சிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும்.
இருப்பினும், பல மருத்துவ வல்லுநர்கள் சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நீங்கள் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது என்று கூறுகிறார்கள்.
குறிப்பாக, சில இறைச்சிகளில் கொழுப்பு ஏராளமாக உள்ளது.
இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். எனவே இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்து நிபுணர்
உணவில் பால், மீன், கோழி மற்றும் தாவர அடிப்படையிலான புரதச் சத்துக்களை சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் சமப்படுத்தி உண்ண மறக்காதீர்கள் என்று கூறுகிறனர்.
பக்க விளைவுகள்
- இறைச்சிகளில் இருந்து வரும் புரதம், கால்சியம் இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- இறைச்சியில் அதிக பாஸ்பரஸ்-கால்சியம் விகிதம் உள்ளது, இது கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. எலும்பு கனிமமயமாக்கலை ஏற்படுத்தும்.
- சிவப்பு இறைச்சி பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உடையது.
- இறைச்சி உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.