சென்னை: அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு அளித்துள்ளார். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்க முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என திருமாவளவன் கூறினார்.