Rajamouli, Ram Charan: ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள இயக்குநர் ராஜமவுலி கோடிக் கணக்கில் செலவு செய்தாரா இல்லையா என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்கர்ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இந்நிலையில் தான் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் ரேஸில் இணைந்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கொடுக்கப்பட்டது. ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கும் நேரத்தில் அந்த தகவல் வெளியாகி தீயாக பரவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
டிக்கெட்ஆஸ்கர் விருது பெறுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே இலவச பாஸ் உண்டு. மற்றவர்கள் தலைக்கு ரூ. 20 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கித் தான் ஆஸ்கர் விருது விழாவை நேரில் பார்க்க வேண்டும். அதனால் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் மற்றும் தன் குடுபத்தாருக்காக கோடிக் கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கினார் ராஜமவுலி என தகவல் வெளியானது.
Rajamouli: ஆஸ்கர் விழாவை காண ஆர்.ஆர்.ஆர். டீமுக்கு இலவச பாஸ் இல்ல: தலைக்கு ரூ. 20 லட்சம் கொடுத்த ராஜமவுலி?
விளக்கம்தன் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதை பார்த்த ராஜமவுலியே இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டதா என ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். இந்நிலையில் தான் டிக்கெட்டுக்காக பெரும் தொகையை எல்லாம் செலவு செய்யவில்லை என ஆர்.ஆர்.ஆர். படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோபம்இருப்பினும் ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கியது தான் அதற்கு காரணம். இந்திய படக்குழு என்றால் குறைச்சலாக போய்விட்டதா, ஏன் கடைசி வரிசை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய்Thalapathy Vijay: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர். குழுவை வாழ்த்தாத விஜய்க்கு பொறாமை: தெலுங்கு மீடியாஆஸ்கர் விருதுடன் இந்தியா திரும்பிய ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு விமான நிலையத்திலேயே அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே விஜய்யை பற்றி தெலுங்கு ஊடகங்கள் சில வெளியிட்ட செய்தி தளபதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவை பாராட்டி விஜய் ஏன் ஒரு ட்வீட் கூட போடவில்லை. பொறாமையா இல்லை கண்டுக்காம இருக்கிறாரா என்றன தெலுங்கு ஊடகங்கள். விஜய் யாரை பார்த்தும் பொறாமைப்படும் ஆள் இல்லை என அவரின் ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.
புகார்சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும். இந்நிலையில் ஆஸ்கர் விருதை பெற ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்ததாக இயக்குநர் தம்மா ரெட்டி பரத்வாஜா தெரிவித்தார். அதை பார்த்த தெலுங்கு ரசிகர்களும், பிரபலங்கள் சிலரும், ஆதாரம் இருந்தால் காட்டுங்க பார்ப்போம் என்றார்கள்.
SS Rajamouli, Oscars 2023: ஆஸ்கர் விருதுக்காக ரூ. 80 கோடி செலவு செய்தாரா ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் எஸ். ராஜமவுலி?