சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை அறிவித்து உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 10ந்தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை […]