வீட்டில் இருக்கும் பெரிய பிரச்சனை எலிப்பிரச்சனை தான்.
இந்த எலித் தொல்லையால் நிறைய நோய்களும் மனிதருக்கு பரவுகின்றன.
வீட்டில் எல்லா இடங்களிலும் உணவுப் பொருட்களை போடுவதால் எலிக்கு எளிதாகி விடுகிறது வீட்டிற்குள் வருவதற்கு.
மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்கி இருக்கும் வழியாக வீட்டிற்குள் எளிதாக நுழைந்து விடுகின்றது.
வீட்டை சத்தமில்லாமல் வைத்திருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எவ்வாறு எலித் தொல்லையை கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்,
புதினா வாசணை
-
எலிகளுக்கு புதினாவின் நறுமணம் பிடிக்காது.
- புதினா எண்ணெய்யை ஒரு பஞ்சில் நனைத்து வையுங்கள்.
- வீட்டின் மூளை முடுக்குகளில் இந்த புதினா எண்ணெய் நனைந்த பஞ்சை வையுங்கள்.
- உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும்.
மிளகு
- வீட்டு சமையலறையில் இருக்கும் மிளகை பொடித்து கொள்ளுங்கள்.
- எலி வரும் பகுதிகளில் வீட்டு மூளை முடுக்குகளில் எல்லாம் மிளகுப் பொடியை தூவி விடுங்கள்.
- இந்த மிளகு நெடி எலிகளை விரட்டி விடும்.
பிரியாணி இலை
-
பிரியாணி இலைகளின் வாசனை எலிகளுக்கு பிடிக்கும்.
- ஆனால் அதை சாப்பிட்டால் இறந்து விடும்.
- ஆகவே எலி இருக்கும் இடங்களுக்கு பிரியாணி இலை போடலாம்.
கற்பூரம்
-
கற்பூர வாசனை எலிகளுக்கு பிடிக்காது.
- வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கற்பூரத் துண்டுகளை வையுங்கள்.
- இதனால் எலிகள் தானாகவே வீட்டை விட்டு சென்றுவிடும்.
படிகாரம்
-
படிகாரத்தூளை கரைத்து எலிகள் இருக்கும் இடங்களில் தெளித்தால் அந்த இடத்தை விட்டு எலிகள் நிரந்தரமாக சென்றுவிடும்.
இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் இருக்கும் எலி தொல்லையை போக்கலாம்..